நிகழ்ச்சிகள்

பரஞ்சோதி மகானின் ஜெயந்தி விழா:

நான் கடவுள் என்ற நூல்வடிவில் நமக்கு அளித்தும், கடவுள் என்ற தத்துவம் இன்னதுதான் என்று விளக்கத்துடன் விளக்கியதும், மனிதன் தன் நிலையை அறிவித்ததும் இவ்வுலக சமாதான ஆலயத்தை நிறுவியவருமான பரஞ்சோதி மகான் பிறந்த நாள் (2.5.1900) ஆண்டுதோறும் நமது தலைமை மையத்தில் நடைபெற்று வருகிறது.

ஞான உதயதின விழா:

11.11.1911 அன்று பகல் 11 மணிக்கு மேலைநாட்டு வல்லரசர்களில் ஒருவரின் முடிசூட்டு விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவைக் கொண்டாட காரணம் என்னவென்று மகான் அவர்கள் ஒரு முதியவரைக் கேட்டார். அவர் நமது அரசருக்கு முடிசூட்டு விழாவானதால் கொண்டாட வேண்டியது அவசியம் என்றார். மகான் உடனே அரசருக்கு பெரியவர் யார் என்றார். "கடவுள்" என்றார். கடவுளை நான் பார்க்க முடியுமா என்று மகான் கேட்டார். சிரித்துக்கொண்டே, பார்க்கலாம் என்றார் அந்த முதியவர். அப்போதே கடவுளை பார்க்க வேண்டும் என்ற ஞான உதயம் உண்டாயிற்று. அந்த நாளை நமது மையத்தில் ஆண்டுதோறும் ஞான உதயதின விழாவாக கொண்டாடி வருகிறோம்.

ஐக்கிய தின விழா:

81 வயது நிரம்பிய நமது பரஞ்சோதி மகான் அவரிகள் 7.1.1981 அன்று தன் ஸ்தூல உடலைவிட்டு பரஞ்சோதியோடு ஐக்கியமானார். அந்நாளை ஐக்கிய தின விழாவாக நம் மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

					
	"சரீர அழகரும் பேரறிவின் புதல்வரும்
	தர்க்கத்தையெல்லாம் தகர்த்தெறிந்த தலைவரும்
	தாரகத்தின் உள்ளுள்ள மௌன மோகினியின் கணவரும்
	தன்னைத்தான் அறிந்த இறைவர்களே!
	தன் இருதய மலர்களே! மெய்யுணர்வாளர்களே!"

	"என் அம்பலத்தில் இருந்து சொல்கிறேன்
	இறைவன், இறைவன் நான் இறைவனே!"

பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகள் பிறந்ததின விழா:

நமது குருவும், பரஞ்சோதி குண்டலினி யோக மையத்தின் நிறுவனருமான தேவராஜ் சுவாமிகள் அவர்களின் பிறந்தநாள் நமது தலைமை மையத்தில் ஆண்டுதோறும் குழந்தைகளின் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகள் ஐக்கிய தின விழா:

99 வயது நிரம்பிய நமது பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகள் 30.09.2011 அன்று தன் ஸ்தூல உடலைவிட்டு பரஞ்சோதியோடு ஐக்கியமானார். அந்நாளை ஐக்கிய தின விழாவாக நம் மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

பௌர்ணமி கூட்டம்:

நமது மையத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று தியானமும், சத்சங்கமும், அனுபவ உரையும் தவறாது நடைபெற்று வருகிறது.

பயிற்சி வகுப்புகள்:

குண்டலினி யோக பயிற்சிகள் நமது மையத்திலும், கிளை மையங்களிலும் அனுபவமிக்க குருபதவியாளர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது.

யோகா வகுப்புகள்:

நமது மையத்திலும் மற்றும் கிளை மையங்களிலும் உடல் ஆரோக்கியத்திற்கு, சிறந்த யோகா ஆசிரியர்களைக் கொண்டு யோகா வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது.

கருத்தரங்கம்:

நமது மையத்திலும் மற்றும் கிளை மையத்திலும் சிறந்த குருமார்களைக் கொண்டு வாழ்வியலுக்கு தேவையான கருத்தரங்கங்கள் நடைப்பெற்று வருகிறது.

வாராந்திர தியான கூட்டம்:

நமது மையம் மற்றும் கிளை மையங்களிலும் வாரந்தோறும் தியானமும், அனுபவவுரையும், கேள்வி பதில்களும் நடைப்பெற்று வருகிறது.