பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகளும், நோக்கமும்

பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகள் முகையூரில் ஒரு தச்சுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து, வாழ்ந்து வந்தார். இவர் தனது இளமை காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். தனது பருவக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்த இவர் பரஞ்சோதி மகான் அவர்களிடத்தில் மெய்யுணர்வு தீட்சை பெற்று, தன்னைத்தான் அறிந்து தன் ஆன்ம சக்தியை பெருக்கி அன்றாட வாழ்வில் அதை உபயோகித்து உடல் நலமும், மனநலமும் பெற்று தன் கடமைகளை செய்து பேரின்பமாய் எல்லையற்ற பரஞ்சோதியோடு கலந்து, தன்னைபோல் அனைவரும் பிரகாசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு 96 வயது கடந்தும் ஞான மெய்யுணர்வை தேடிவரும் அன்பர்களுக்கு மன மகிழ்வோடு பேரின்பத்தைத் தரும் இத்தீட்சையினை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய உலத்தில் விஞ்ஞானம் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் தனிமனிதன் இடத்தில் நிம்மதியும் ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருகிறது. மறுபக்கம் மதங்களின் பெயரால் சண்டைகளும், சச்சரவுகளும், தீவிரவாதமும் உண்டாகி அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. அதற்கு ஒரே தீர்வு ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத் தானே அறிய வேண்டும். இது ஒன்று தான் உலக சமாதானத்திற்கு வழி வகுக்கிறது.

நமது குரு சிங்கப்பூர், மலேசியா சென்று அங்கு பல கூட்டங்களில் மக்களிடம் ஞான அறிவினையும், அருள் ஆசியினையும் வழங்கி 27-05-2007 அன்று தாய்நாடு திரும்பினார்.

ஆஸ்திரேலியா, நெதர்லாண்டு, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும், குரு தேவராஜ் சுவாமிகளிடம் தொடர்பு கொண்டு இப்பயிற்சியினை கற்று தேர்ந்து, இப்பயிற்சியை வெளிநாட்டிலும் பரப்பி நம் குருவிற்கு பெருமை சேர்க்கின்றனர்.