மெய்யுணர்வின் அனுபவம்

மெய் என்பது உண்மை - சத்தியம்.

ஐந்தறிவு ஜீவன் அனைத்தும் புலன் வழியாக உணர்ந்து (இயல்புணர்ச்சி) வாழ்வதால் விலங்கினம் என்கின்றோம்.

எண்ணம், சொல், செயல்படி நடக்க முயற்சிப்பதால் தான் மனிதனை ஆறறிவுடையவன் என்கின்றோம்.

மனிதன் புலன் வழியாக உணர்வதை மாற்றி நெற்றி கண்ணில் உயிர்சக்தியை குருவின் மூலம் உணர்தலே மெய் உணர்வு எனப்படுகிறது.

மெய்யுணர்வு வழியாக கவனித்து செல்கிற பொழுது உண்மை பிரகாசிக்கிறது. அந்த உண்மை மாறாதது, என்றும் உள்ளது, இன்பமும் - துன்பமும் இல்லாதது, பிறப்பும் - இறப்பும் அற்றது. பேரின்பம், பேரறிவு, பேராற்றல் உள்ளது. அதை அடைவதே மனித குலத்தின் பிறவிப்பயனாகும்.

இப்பேருண்மையை அடைவது, அடைந்து பிரகாசிப்பது மிக மிக எளிது. இதற்கு பணமோ, பொருளோ, விஷயஞானமோ, படிப்போ, ஜாதி மதமோ, மொழியோ தேவையில்லை. புரிந்து உணர்கின்ற நுட்பம் இருந்தால் போதுமானது.

பரஞ்சோதி மகானின் வழியில் வந்த தேவராஜ் சுவாமிகளைப் பின்பற்றி தன்னைத் தான் அறியும் முயற்சியில் ஈடுபடுவோம் நாம் அனைவரும் !

சந்தோஷம் !

இப்படிக்கு,
கோவிந்தராஜ்
(செயலாளர்)
Paranjothi SKY Trust