கடவுள் தத்துவத்தையும் ஞானத்தையும் பேரின்பத்தையும் அடைய வாரீர்

 • கடவுளுக்கு உருவமில்லை என்றால் நாம் எப்படி உருவானோம்?
 • நாம் உருவாக இருக்கும்போது நாம் உருவமில்லாத அவனை எவ்வாறு பார்க்க முடியும்?
 • நம்மை அவன் படைத்தான் என்றால் எதைக்கொண்டு படைத்தான்?
 • அந்தப்பொருள் எத்தன்மையானது?
 • அவன் எங்கும் நிறைந்தவன் என்றால் அவனைப்பார்க்க, வணங்க தனி ஆலயங்கள் ஏன்?
 • அவன் ஒருவனாக இருக்கும் பொழுது எண்ணிக்கை அற்ற பெயர்களுடன் ஏன் செபிக்க வேண்டும்?
 • அவனே பெரியவனாக இருக்கும்பொழுது இந்த உலகத்தில் சிறியோன், பெரியோன் என்ற பேதங்கள் ஏன் உண்டாகின்றன?
 • அங்கு ஒரு தீர்ப்பு நாள் இருந்தால் இங்கு இத்தனை நீதிமன்றங்கள் எதற்காக?
 • கடவுளின் நல்ல செயலுக்கு நேர்மாற்றம் உடையவன் ஒருவன் கெட்ட செயலை செய்து கொண்டு எதிரியாக (சாத்தான்) இருந்தால் இதில் யார் பெரியவன்?
 • இவ்விருவர்களையும் படைத்தவன் யார்?
 • மக்கள் செயலுக்கு தக்கபடி சொர்க்கமும், நரகமும் எங்கோ இருந்தாலும் சரி, மறு ஜென்பங்களில் வந்து அனுபவித்தாலும் சரி, நாளுக்குநாள் ஜனத்தொகை குறையவேண்டுமே அல்லாது கூடுவதற்கு காரணமென்ன?
 • எல்லாம் அவன் திருவிளையாட்டு என்றாலும், மாயையென்றாலும் மனிதனுக்கு மட்டும் ஏன் மாயை அல்லது அதிக ஆசை கூடாது?
 • எல்லா படைப்புகளிலும் மனிதப்படைப்பு மிகப்பெரியது என்றால் மனிதர்களைவிட சக்திவாய்ந்த சீவராசிகள் அதிகமாகவும் மிகப்பெரியதாகவும், மனிதனுக்கு பயன்படக்கூடியதாகவும் இருக்கின்றனவே!
 • மேலும், மனிதனால், அம்மிருகங்களுக்கு ஒரு லாபமும் இல்லாமல் இருக்கும்போது மனிதன் அவைகள் முலமாய் வாழவேண்டியவனாய் இருக்கிறான்.
 • மற்றும் சில சீவராசிகளின் இன்னலுக்கு பயந்து பாதுகாப்பு தேடுகிறவனாக மனிதன் இருக்கும் போது எப்படி உயர்ந்தவனாவான்?
 • எதிலும் உயர்ந்தவன் என்றும் சாகாமல் எப்பொழுதும் இருக்கலாம் என்கிறார்களே, இதுவரையில் சாகாமல் இருந்தவன் எவன்?
 • உயர்ந்தவன் எவன்?
 • பேரின்பம் என்றால் என்ன?

இவ்விதமாக அனேக கேள்விகள் என் உள்ளத்தில் தானே உண்டாகி அவைகளை அதிகமாக ஆராயப்புகுந்த நிலையிலும், எல்லாவற்றையும் நம்பியவனாய் குண்டலினி தவத்தில் ஈடுபட்டு வந்தேன். அத்தவத்தின் பயனால் எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் நானே அறிந்து, 'நான் கடவுள்' என்ற நூலாக வெளியிட்டுள்ளேன்.

- பரஞ்சோதி மகான்