மனோகரனின் அனுபவங்கள்

மனித பிறவி எடுத்த நோக்கமே இறைநிலையை அறிந்து அதனுடன் ஐக்கியம் ஆவதுதான். சுமார் 600 கோடி மக்கள் தொகை உள்ள இந்த உலகத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தவர்கள் சிலரே. உடலில் உள்ள ஐம்புலன்களால் இறைநிலையை அறியமுடியாது. நமது உள் உணர்வால் மட்டுமே இறைநிலையை உணர முடியும். நமது குருமகான் தேவராஜ் சுவாமிகள் மூலம் குண்டலினி தீட்சை பெற்ற நாம், அந்த இறை உணர்வினை நமது உடல் முழுவதும் பரவச் செய்ய பழகி கொள்வதன் மூலம், நமது உடலில் உள்ள நோய்கள் விலகி உடல் சுத்தமாகின்றது.

ஆக்கினை, துரியம் ஆகிய நிலைகளில் உணர்வினை வைத்து தவம் செய்யும்போது, நம் மனதில் உள்ள அதிகப்படியான ஆசைகள், கோபம் போன்றவைகள் குறைந்து மனம் பக்குவம் அடைகின்றது. துரியம் கடந்த துரியாதீத நிலையில் தவம் செய்யும்போது எண்ணங்கள் அற்ற நிலை அடைந்து இறை நிலையோடு தொடர்பில் இருக்கும்போது நாமும் அதுவும் ஒன்றுதான் என்ற உண்மை புலப்படுகின்றது. நமது மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் கிடைக்கின்றது. எனவே விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் பரஞ்சோதி மகானின் வழி வந்த குருக்களின் மூலம் குண்டலினி உபதேசம் பெற்று இந்த பேரானந்த நிலையை அடைய வாரீர், வருவீர்.

சந்தேஷம்.

S.மனோகரன்
துணைத் தலைவர்