நோக்கம்

குண்டலினி யோகத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் துறவறத்தை ஏற்று காடுகளிலும், மலைகளிலும் இத்தவத்தை கடுமையான முறைகளை கடைபிடித்தனர்.

இத்தவத்தால் மனித குலத்திற்கு நல் உபதேசங்களை வழங்கி, மாமனிதராக வாழ்ந்து காட்டினார்கள்.

அதே சமயத்தில் அவர்கள் குண்டலினி யோகத்தை ரகசியமாக பாதுகாத்தும் அவர் வாழும் காலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே குண்டலினி யோக ரகசியத்தை கற்று கொடுத்து வந்தார்கள்.

குண்டலினியோக சக்தியை மூலாதாரத்தில் இருந்து (ஏறுபடி) நெற்றி கண்ணிற்கு கொண்டு செல்லவும் மீண்டும் மூலாதாரத்திற்கு (இறங்குபடி) கொண்டு வரும் மார்க்கத்தை கண்டுபிடித்து எளிமைப்படுத்தி இல்லறத்தில் இருப்பவர்களும் உலகியலில் ஈடுபட்டு கொண்டே யோகத்தில் பயிலலாம் என்றும், ஆண், பெண், சாதி, மத பாகுபாடு இன்றி தன்னை தான் அறிய வேண்டும் என்கின்ற அனைவருக்கும் குண்டலினி யோக மெய் உணர்வை வாரி வாரி வழங்கி மகான் அவர்கள் ஞான வள்ளல் ஆனார். மகான் அவர்களை பின்பற்றி நடப்பதே இம்மையத்தின் நோக்கமாகும்.