ராஜனின் அனுபவ உரை


"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"

என்ற வள்ளுவன் கூற்றுக்கினங்க இப்பிறவியாகிய பெருங்கடலை நீந்த எனது குருவை சந்தித்த அந்த நாளே என் வாழ்கையின் பிறவிப்பயனை அடைந்த நாள். என்னிலையிலும் தன்னிலை மாறாது என்னை இப்பூவுலக வாழ்க்கையெனும் பெருங்கடலை நீந்த இம்மெய்யுணர்வே இந்த மாலுமிக்கு ஒரு சுக்கானாக விளங்குகின்றது.

இன்னல் பல சந்தித்தும், ஏமாற்றம் பல அடைந்தும், இம்மெய்யுணர்வு ஒன்றே மெய்யானது என்றுணர்ந்து உயர்நிலைக்கு என்னை இட்டுச் செல்கிறது. மனிதன் ஆசைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் இவ்வுலகில் ஒழுக்கம், நேர்மை, சிந்தனை, சொல், செயல் அனைத்தும் சீர் செய்து நம்மை இறை நிலைக்கு இட்டுச்செல்லும் இம்மெய்யுணர்வை எய்துவதே பிறவிப்பயனாகும்.

சந்தோஷம் !

இப்படிக்கு,
ராஜன் M.A. L.L.B,
சட்ட ஆலோசகர்,
பரஞ்சோதி SKY மையம்