சுவாமிநாதனின் அனுபவங்கள்

சந்தோஷம்

என் பெயர் சுவாமிநாதன். நான் ஒரு தொழிலதிபர். என்னுடைய அலுவல்களுக்கு இடையில் இறை ஏக்கமும், இறை நாட்டமும் இருந்தது. அதன் பயனாக குரு தேவராஜ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. அவர்களிடமிருந்து பரஞ்சோதி மகானின் எளிய முறை குண்டலினி தீட்சையை ஏப்ரல் 2006ல் பெற்றேன். குருவின் உபதேசத்தின்படி தினமும் இருவேளை குண்டலினி யோகா செய்து கொண்டு வருகிறேன்.

இதன்மூலம் நான் பெற்ற அனுபவங்களாவன:

நான் யார் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறேன்.

குண நலன்களில் நல்ல மாற்றம் கண்டு இருக்கிறேன்.

உடல் நலமும் முன்னேற்றம் கண்டு இருக்கிறேன்.

என்னை புரிந்து கொண்டதால் குண நலமும், குண நலத்தால் மன நலமும், மன நலத்தால் நல் உடல் நலமும், இவைகளினால் நல்ல ஆன்ம பலமும், ஆன்ம பலத்தால் நல் அமைதியும் பெற்று இன்புற்று இருக்கிறேன். வேறு என்ன வேண்டும்?

சந்தோஷம்.

அன்புடன்
வெ. சுவாமிநாதன்.
(தொழிலதிபர்)